பயற்றமுருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பயத்தம்மா - 1 கப்

சிவப்பு அரிசிமா - 1/2 கப்

தேங்காய்ப்பூ - 1/2 கப்

சீனி - 1/2 கப் (அல்லது தேவைக்கேற்ப)

உப்பு - 1 சிட்டிகை

ஏலம் - 3 - 4

எண்ணெய் - பொரிப்பதற்கு

மேல்மாவிற்கு:

-------------

மைதா மா - 1/2 கப்

தேங்காய்ப்பால் - சிறிது

உப்பு

செய்முறை:

பயத்தம் மா, அரிசி மாவை தனித்தனியே வறுத்து ஆறவிடவும்.

மைதாமாவை ஆவியில் அவித்தெடுத்து அரித்து ஆறவிடவும்.

தேங்காய்ப்பூவினுள் 1/2 கப் தண்ணீர் விட்டு பிழிந்து பால் எடுக்கவும்.

பிழிந்த பூவை வெறும் சட்டியில் (வாணலியில்) போட்டு சிவக்க வறுத்து பொடியாக்கி வைக்கவும்)

பயத்தம்மா, அரிசிமா, வறுத்த தேங்காய்ப்பூ, சீனி சேர்த்து கலக்கவும்.

தேங்காய்ப்பாலினுள் உப்பு, ஏலம் சேர்த்து நன்கு காய்ச்சவும்.

பின்னர் இதை மாக்கலவையினுள் போட்டு கிண்டவும்.

மாக்கலவை உலிர் பதமாக, ஆனால் உருட்டிப்பிடித்தால் பிடிக்கக் கூடியதாக குழைக்க வேண்டும். தேவப்பட்டால் சிறிது சுடுதண்ணீர் விட்டும் குழைக்கலாம்.

பின்னர் மாக்கலவையை நெல்லிக்காயளவு அல்லது சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

மேல்மாவு: அவித்த மைதா மவுனுள் தேங்காய்ப்பால் (அல்லது தண்ணீர்) உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு குழைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து உருண்டைகளை மேல்மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

சுவையான பயற்றமுருண்டைகள் தயார். மாலைநேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது.

குறிப்புகள்: