பயத்தம் லட்டு
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு (பயத்தம்பருப்பு) - 500 கிராம்
சர்க்கரை (சீனி) - 500 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு (கஜு) - தேவையானளவு
நெய் - 100 கிராம்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதை சூடாக்கவும். சூடாக்கிய தாட்சியில்(வாணலியில்) பாசிப்பயற்றை (பயித்தம்பருப்பை) போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
வறுத்த பாசிப்பயற்றை(பயித்தம்பருப்பை) வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
ஆறவைத்த பாசிப்பயற்றை(பயித்தம்பருப்பை) கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு மாவாக்கவும்.
அடுப்பிலுள்ள தாட்சியில்(வாணலியில்) கொஞ்சம் நெய் விட்டு சூடாக்கவும்.
அதில் உடைத்த முந்திரிப்பருப்பை(கஜு) போட்டு பொரிக்கவும்.
பொரித்த முந்திரிப்பருப்பை(கஜு) ஒரு பாத்திரத்தில் போடவும். அதன் பின்பு மிகுதி நெய்யை உருக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த பாசிப்பயறுமா(வறுத்த பயித்தம்பருப்பு மா), சர்க்கரை(சீனி), ஏலக்காய்த்தூள், பொரித்த முந்திரிப்பருப்பை(கஜு), உருக்கியநெய், உப்பு,ஆகியவற்றை சேர்த்து சூட்டுடன் உருண்டைகளாக பிடிக்கவும்.
உருண்டைகளை பிடித்ததும் பயித்தம் லட்டு தயாராகிவிடும். பயத்தம் லட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதன் பின்பு அதை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
பயத்தம் லட்டு சுவையானதும், செய்வதுக்கு இலகுவானதும், சத்துக்கள் நிறைந்ததும் வயதானவர்களுக்கும் மிக மிக எளிதாக ஜீரணமாககூடியதுமான ஓர் இனிப்பு வகையாகும். மாற்று முறை - முந்திரிப்பருப்புக்கு(கஜு) பதிலாக வேர்கடலையை(கச்சான்) வறுத்து இரண்டாக உடைத்து போடலாம். எச்சரிக்கை - இருதய நோயாளர் ,சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - சூடாக்கிய தாட்சியில் (வாணலியில்) பாசிப்பயற்றை (பயித்தம்பருப்பை) போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.