பயத்தங்காய் வதக்கல் (சீன முறை)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பயத்தங்காய் - 1/2 கட்டு (ஒரு அங்குலத்துண்டுகளாக நறுக்கியது)

வெங்காயத்தாள் - 1 கட்டு (ஒரு அங்குலத்துண்டுகளாக நறுக்கியது)

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (மெல்லிய சதுரதுண்டுகளாக நறுக்கியது)

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் ( நீள துண்டுகளாக நறுக்கியது)

வத்தல் மிளகாய் - 10 ( 2 துண்டுகளாக்கவும்)

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும். அடுத்து காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடு வதக்கவும்.

அடுத்து பயத்தங்காயைப்போட்டு வதக்கவும். 3 நிமிடம் கழித்து சிறிது தண்ணீரை தெளித்து வேகவிடவும். மிதமான தீயிலேயே செய்யவும். தேவையான அளவு உப்பு போட்டு எல்லாமும் சேர்த்து கிண்டி இறக்கவும்.

குறிப்புகள்:

பயத்தங்காயை லாங் பீன்ஸ் என்று அழைப்பர், இந்த காயை சமைக்கவும் செய்யலாம், அல்லது பீன்ஸின் உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் பயன்படுத்தலாம். பயத்தங்காயை கழுவி நறுக்கி தண்ணீரிலே போட்டு வைக்கவும், சமைக்கும் முன் தண்ணீரை வடித்தால் போதும். காய் ரொம்பவும் வெந்து விடக்கூடாது, தண்ணீர் ஊற்றக் கூடாது தெளிக்க வேண்டும். காய் குழைந்துப்போகக்கூடாது.