பப்பாளி க்ரானிட்டா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பப்பாளிதுண்டுகள் -2 கப்

சர்க்கரை -1/2 கப்

எலுமிச்சைசாறு -1டீஸ்பூன்

இஞ்சி துருவல்-1 டீஸ்பூன்

செய்முறை:

பப்பாளித்துண்டுகளை,இஞ்சிதுருவல் சேர்த்து ப்ளண்டரில் அடித்து வடிகட்டவும்

1 கப் நீரை கொதிக்கவிட்டு அதில் சர்க்கரை சேர்த்து கரையும்வரை கொதிக்கவிடவும்

பின் சிரப்பை இறக்கி ஆறவிடவும்

நன்றாக ஆறியதும் பப்பாளிக்கலவையை சேர்த்து கலைக்கி எலுமிச்சை சாறும் சேர்ந்து கலக்கவும்.

அதை கண்டெயினர் பாக்ஸில் போட்டு ப்ரீசரில் வைத்து ஒர் மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியில் எடுத்து கலந்து மீண்டும் வைக்கவும்

இது போல் ஆறு முறை செய்து பின் ப்ரீசரில் 6 மணி நேரம் வைக்கவும்

வெளியில் எடுத்து சிறிது நேரம் கழித்து போர்க் ஸ்பூனால் கிளறவும்

இதை விரும்பினால் சிறிது ஐஸ்கிறீம் சேர்த்து சாப்பிடலாம்

குறிப்புகள்:

இனிப்பான கனிந்த சிவந்த பப்பாளித்துண்டுகள் அதிக சுவை கொடுக்கும்