பப்பாசிக்காய் துவையல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பப்பாசிக்காய் (ஒரளவு முற்றியது) - ஒன்று

தக்காளிப்பழம்(நாட்டு) - 3

சின்ன வெங்காயம் - ஒரு பிடி

பழுத்த பச்சைமிளகாய் - 4

சர்க்கரை (வெல்லம்) - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையானளவு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் (சோம்பூ) - அரை தேக்கரண்டி

தேங்காய்ப்பூ (விரும்பினால்) - தேவையான அளவு

செய்முறை:

பப்பாசிக்காயின் தோலைச்சீவி, விதைகளை அகற்றி, துண்டுகளாக வெட்டவும்.

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

பப்பாசித்துண்டுகள், தக்காளித்துண்டுகள், வெங்காயம், பச்சைமிளகாய், வெல்லம், உப்பு, தேங்காய்ப்பூ (விரும்பினால்)சேர்த்து பச்சையாகவே அரைக்கவும்.

வாணலி(தாச்சி)யில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, சீரகம்(சோம்பூ) ஒரளவு வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

பின் அரைத்த துவையலை போட்டு லேசாக வதக்கி இறக்கவும். இதோ சுவையான பப்பாசிக்காய் துவையல் தயார்.

குறிப்புகள்:

இரத்த விருத்திக்கேற்றது, இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும். கேன்சருக்கு நல்ல உணவு. (1)கவனிக்க வேண்டிய விஷயங்கள்- பப்பாசிக்காய் (ஒரளவுமுற்றியது), தக்காளிப்பழம்(நாட்டு), சின்ன வெங்காயம் (2) மாற்று முறை - தேங்காய்ப்பூ (விரும்பினால்) சேர்க்கவும்.