பப்பலோ விங்க்ஸ் (Buffalo Wings)
தேவையான பொருட்கள்:
சிக்கன் விங்க்ஸ் - 10
ஹாட் சாஸ்(Hot sauce) - 1/2 கப்
பட்டர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் சிக்கன் விங்க்ஸை நன்றாக கழுவி கொள்ளவும்.
பின் சிக்கன் விங்க்ஸை ஒரு துணியை பரப்பி அதன் மேல் வைக்கவும்.(சிக்கனில் தண்ணீர் இல்லாமல் இருந்தால் பொரிக்கும் பொழுது நல்லது)
ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து அதில் சிக்கன் விங்க்ஸை பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது வேறு ஒரு கடாயில் பட்டரை உருக்கி அத்துடன் ஹாட் சாஸை ஊற்றி கிளறவும்.
பின்பு பொரித்து வைத்துள்ள சிக்கன் விங்க்ஸை அதில் போட்டு பிரட்டவும்.
இப்பொழுது சுவையான பப்பலோ விங்க்ஸ் ரெடி. இதனை ரான்ச்(Ranch) அல்லது ப்ளு சீஸுடன்(Blue cheese) சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
இதனை பப்பலோ என்ற ஊரில் கண்டுபிடித்தால் அந்த ஊரின் பெயரே அதற்கு வைத்துள்ளார்கள்.
இதில் உப்பு சேர்க்க தேவையில்லை. ஹாட் சாஸியில் உப்பு சேர்த்து இருக்கும்.