பனீர் கிரேவி
தேவையான பொருட்கள்:
பனீர்- கால் கிலோ
சோம்பு- கால் ஸ்பூன்
வெங்காயம்- 2
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
முந்திரி விழுது- 3 ஸ்பூன்
தயிர்- 3 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பட்டர்- 2 ஸ்பூன்
எண்ணெய்- பொரிக்க
செய்முறை:
பனீரை கட் செய்து எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்
பட்டரில் சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
தக்காளி சேர்த்து குழைந்ததும் தூள் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் பொரித்த பனீர் துண்டுகளுடன் முந்திரி விழுது,தயிர், கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
தேவைக்கு சிறிதளவு தண்ணீர் விட்டு மசாலா ஒட்டும் வரை வைத்திருந்து பின் இறக்கவும்
குறிப்புகள்:
சப்பாத்தி படூராவிற்கு தொட்டுக்கொள்ளவும், ப்ரைட் ரைஸ்க்கு நல்ல பொருத்தம். இதே முறையில் காளானிலும் செய்யலாம்