பனினி ப்ரெட் சாண்ட்விச் (1)
தேவையான பொருட்கள்:
பனினி ப்ரெட் - 2
ஸ்பினாச் - கொஞ்சம்
மொஸரல்ல சீஸ் - துருவியது
சிவப்பு காப்ஸிகம் - ரோஸ்ட் செய்தது
ஆலிவ்ஸ் கறுப்பு - இரண்டாக கட் செய்தது
லெட்டுஸ் - கொஞ்சம்
சிகப்பு வெங்காயம் - 1 (நீளமாக வெட்டியது)
ஆலப்பினோ - 1 (வேண்டுமென்றால்)
ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
பார்ஸ்லி - கொஞ்சம்
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களிலும் கொஞ்சம் ஆலிவ் எண்ணெயை ப்ரெஷ்ஷால் தடவவும்
இப்போது அதில் முதலில் ஸ்பினாச், ஆலிவ்ஸ், ரோஸ்டட் சிகப்பு காப்ஸிகம்,லெட்டுஸ், வெங்காயம், ஆலாப்பினோ, சீஸ், எல்லாவற்றையும் வைத்து ப்ரெட்டால் மூடி சாண்ட்விச் மேக்கரில் வைத்து (5 நிமிடம்)ஆட்டோமேடிக் என்றால் அது முடிந்தவுடன் எடுத்து அப்படியே சாப்பிடவும்.
குறிப்புகள்:
இது இத்தாலியன் ப்ரெட் சாண்ட்விச் ரொம்ப டேஸ்டியாக இருக்கும்.
இதை சாண்ட்விச் மேக்கரில் செய்தால் நன்றாக இருக்கும்