பனானா லஸ்ஸி
0
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2
புளிக்காத தயிர் - 1/2 டம்ளர்
பால் - 1/2 டம்ளர்
சீனி - 10ஸ்பூன்
செய்முறை:
அனைத்து பொருள்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்கவும்.
இதை ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து பரிமாறவும்.
பரிமாறும் முன்பு மேலே கொஞ்சம் குங்குமப்பூ போட்டால் பார்க்க அழகாகவும்,சுவை அபாரமாகவும் இருக்கும்.
குறிப்புகள்:
மிக்ஸியில் அடிக்கும் போது இவற்றுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்தும் அடிக்கலாம்.ஐஸ் சேர்த்து அடித்தால் உடனே பரிமாறலாம்.லஸ்ஸி கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.