பனானா மஃபின்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 3/4 கப் வாழைப்பழம் - 2 பெரிது அல்லது 3 சின்னது பொடியாக நறுக்கிய நட்ஸ் கலவை - சிறிது பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி சர்க்கரை - கால் கப் [வாழைப்பழத்தின் சுவைக்கு ஏற்ப] எண்ணெய் - கால் கப் அல்லது வெண்ணெய் - கால் கப் வெண்ணிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
செய்முறை:
அவனை 190Cல் முற்சூடு செய்யவும். வாழைப்பழத்தை கூழாக்கவும். மாவுடன் சர்க்கரை
பேக்கிங் பவுடர்
பேக்கிங் சோடா கலந்து வைக்கவும்.
இத்துடன் வாழைப்பழ கூழ்
எண்ணெய்
வெண்ணிலா எசன்ஸ் கலந்து விடவும்.
இந்த கலவையை எல்லாம் ஒன்றாக சேரும் அளவு கலந்தால் போதும்
அதிகமாக அடித்து கலக்க கூடாது.
இதில் நட்ஸ் வகைகளை பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து விடவும்.
அவன் ட்ரேவில் அல்லது மஃபின் ட்ரேவில் லைனர்ஸ் வைத்து மாவை 3/4 பாகம் வரை நிரப்பவும். அதன் மேல் நட்ஸ் வகைகள் சிறிது தூவி வைக்கவும்.
25 - 30 நிமிடம் வைத்து பின் ஒரு டூத் பிக் வைத்து குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் வெளியில் எடுத்து ஆற விடவும்.
சுவையான எக்லஸ் நட்ஸ் பனானா மஃபின் தயார்.