பனானா மஃபின்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கோப்பை

கோதுமை மாவு - ஒரு கோப்பை

நன்கு பழுத்த வாழைப்பழம் - இரண்டு

சர்க்கரை - முக்கால் கோப்பை

பிரவுன் சுகர் - கால் கோப்பை

ஆலிவ் ஆயில் - முக்கால் கோப்பை

முட்டை - இரண்டு

வால்நட்ஸ் (அ) பாதாம்பருப்பு - அரைக்கோப்பை

வென்னிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

ஆப்பச்சோடா - ஒரு தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு சிட்டிக்கை

செய்முறை:

முதலில் அவனை 350 டிகிரி Fல் வைத்து சூடுபடுத்தவும்.

மைதாவுடன், கோதுமை, உப்பு, ஆப்பச்சோடா ஆகியவற்றைச் சேர்த்து சல்லடையின் உதவியால் சலித்து கலந்து வைக்கவும்.

வாழைப்பழங்களை நன்கு மசித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி முள்ளுக்கரண்டியால் நன்கு அடிக்கவும். அதில் சர்க்கரையையும், பிரவுன் சுகரையும் போட்டு நன்கு கரையும் வரை அடிக்கவும்.

பிறகு ஆலிவ் எண்ணெயை ஊற்றி கலக்கி விட்டு மைதா கலவையைச் சேர்த்து கலக்கவும்.

கடைசியில் வாழைப்பழத்தைப் போட்டு வால்நட்ஸ் மற்றும் வென்னிலா எசன்ஸ்ஸையும் சேர்த்து இலேசாக கலக்கவும்.

பிறகு பன்னிரண்டு குழிகளுள்ள மஃபின் டின்னில் எண்ணெயை தடவி நேரிடையாக எல்லா குழிகளிலும் சரிசமமாக ஊற்றி அவனில் வைத்து விடவும்.

மஃபினை நாற்பத்தைந்து நிமிடங்கள் கழித்து வெந்ததை உறுதி செய்ய ஒரு குச்சியால் அல்லது கத்தியால் நுழைத்து பார்த்து அதில் கலவை ஒட்டாமல் வரும் வரை வேகவைக்கவும்.

மஃபின் வெந்த பிறகு அவனிலிருந்து மஃபின் டின்னை வெளியில் எடுத்து பத்து நிமிடங்களுக்கு அப்படியே ஆறவைத்த பிறகு, தட்டில் எடுத்து வைத்து நன்கு ஆறியப் பிறகு பரிமாறவும்.

குறிப்புகள்: