பனானா ஃபிரிட்டர்ஸ் [வாழைப்பழ பஜ்ஜி]
0
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பழம் - 7
2. தேன் [விரும்பினால்]
மாவு :
1. மைதா மாவு - 1 கப் [125 கிராம்]
2. பால் - 2 மேஜைக்கரண்டி
3. பட்டர் - 3/4 தேக்கரண்டி
4. பவுடர்ட் சுகர் (அ) கேஸ்டர் சுகர் - 1 மேஜைக்கரண்டி
5. தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
மாவு கரைக்க தேவையானதை எல்லாம் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
வாழைப்பழத்தை பஜ்ஜி'கு வெட்டுவதை விட சற்று கனமாக வெட்டவும்.
இதை மாவில் தோய்த்து பஜ்ஜி போல் சுட்டு எடுக்கவும்.
மேலே சிறிது தேன் விட்டு பரிமாறவும்.