பட்டி ஷு (பிரெஞ்சு பப்ஸ்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயார் செய்த மாவு - 300 கிராம் கோழி (எலும்பு நீக்கியது) - கால் கிலோ வெங்காயம் - பாதி வெள்ளை மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை முட்டை - 2 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் வெங்காயத்தைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் மிளகுத் தூள்

உப்பு

அஜினோமோட்டோ மற்றும் முட்டை (ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்) சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

பிறகு தயார் செய்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து

சிறு வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அதில் ஒரு வட்டத் துண்டின் நடுவில் இறைச்சி கலவையை வைத்து

அதன் மேல் இன்னொரு வட்டத்தை வைத்து மூடி

ஓரங்களை விரலால் அழுத்தி மூடவும்.

இதே போல் மீதமுள்ள மாவிலும் இறைச்சிக் கலவையை வைத்து மூடி

அவனில் வைத்து 220 டிகிரி ஃபாரன்ஹீட்டில் நிமிடங்கள் வேக வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து தனியாக எடுத்து வைத்துள்ள முட்டையின் மஞ்சள் கருவை நன்றாகக் கலந்து

பப்ஸின் மேல் பரவலாகத் தடவி மீண்டும் அவனில் வைத்து வேகவிடவும். சிவந்த பிறகு வெளியே எடுக்கவும்.

டேஸ்டி பட்டி ஷு ரெடி. சூடாகப் பரிமாறவும்.

குறிப்புகள்: