நெல்லிக்காய் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 20

தயிர் - 2 கப்

இஞ்சி - ஒரு துண்டு (ஒரளவு)

பச்சைமிளகாய்- 3 - 5 (பொடிப்பொடியாக நறுக்கவும்)

உப்பு - தேவையானளவு

கறிவேப்பிலை - சிறிதளவு (பொடிப்பொடியாக நறுக்கவும்)

கடுகு - அரை தேக்கரண்டி

வெங்காயம் - பாதி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

செய்முறை:

நெல்லிக்காயை வேகவைத்து விதை(கொட்டை) நீக்கி இஞ்சியுடன் சேர்த்து மிக்ஸியில் (கிரைண்டரில்) அரைத்து கொள்ளவும்.

அரைத்தவற்றுடன், தயிர், உப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றினை கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெங்காயம் தாளிக்கவும். தாளித்தவற்றை கலவையுடன் கலக்கவும். இதோ நெல்லிக்காய் சாலட் தயார்.

குறிப்புகள்:

உங்கள் இளமையை அதிகரிக்க செய்யும் (நீண்ட காலம் வாழ உதவும்)