நெத்திலி வறுவல்
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி இஞ்சி விழுது - ஒரு மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு மேசைக்கரண்டி மீன் சீசனிங் (seasoning) தூள் - ஒரு மேசைக்கரண்டி[ இந்த தூள் இருந்தால் போடவும் இல்லை என்றால் விட்டு விடலாம்] சோம்பு தூள் - ஒரு மேசைக்கரண்டி சீரக தூள் - ஒரு மேசைக்கரண்டி சக்தி மீன் மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி லெமன் ஜூஸ் - 2 அல்லது 3 சொட்டு தேங்காய் பால் - 4 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
மீனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
மீனுடன் மசாலா தூள் வகை
தேங்காய் பால் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து பிரட்டி வைக்கவும்.
பல் குச்சியால் (டூத் பிக்கில்) 6 அல்லது 7 ஆக சேர்த்து குத்திக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு பொரித்து எடுக்கவும்.
இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைக்கவும். [கொஞ்சம் க்ரிஸ்பியாக வறுத்தால் சுவை அருமையாக இருக்கும்]