நெத்திலிக் கருவாட்டுக் கறி
தேவையான பொருட்கள்:
நெத்திலிக் கருவாடு - 200 கிராம் கத்திரிக்காய் - 75 - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 30 கிராம் எலுமிச்சை - பாதி பூண்டு - 4 - 5 பற்கள் கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கருவாட்டை கொதிநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் எடுத்து கழுவிக் கொள்ளவும். கத்திரிக்காய்
வெங்காயம்
பச்சை மிளகாய் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். (இதற்கு சின்ன வெங்காயம் உபயோகிப்பது நல்லது
தோலை நீக்கி விட்டு பாதியாக நறுக்கி போட்டால் போதும்)
ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் கருவாடு
கத்திரிக்காய்
பூண்டு
வெங்காயம்
பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
அதன் மேல் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வெந்ததும் கறித்தூள்
கறிவேப்பிலை மற்றும் உப்பு போட்டு பிரட்டி விடவும். (பெரும்பாலும் நெத்திலி கருவாட்டில் உப்பு இருப்பதில்லை அதனால் கருவாட்டை சுவை பார்த்து உப்பு சேர்க்கவும்.)
நன்கு எல்லாம் ஒன்றாக சேர்ந்து பிரட்டல் ஆனதும் இறக்கி வைத்து எலுமிச்சை பழம் பிழியவும்.
சுவையான நெத்திலி கருவாட்டு கறி ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.