நுக் மம் (ஃபிஷ் சாஸ்)
0
தேவையான பொருட்கள்:
ஃபிஷ் சாஸ் - அரை கப்
சீனி - 3/4 கப்
தண்ணீர் - 2 கப்
வினிகர் - கால் கப்
அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
துருவிய கேரட் - மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் சீனி, ஃபிஷ் சாஸ் இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
பின்பு இறக்கி ஆற விடவும், பின்பு அதில் வினிகர், நசுக்கிய பூண்டு, நசுக்கிய மிளகாய், துருவிய கேரட் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
இதுவே நுக்மம். இது என்னுடய குறிப்பான சைனீஸ் நூடுல்ஸ், இறால் பஜ்ஜி இவைகளுடன் சாப்பிடலாம்.