நாரத்தை பழம் டீ

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த நாரத்தம் பழம் - 2

தேன் - 1/2 கப் (சுவைக்கேற்றவாறு)

அல்லது சர்க்கரை - 5 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

நன்கு பழுத்த நாரத்தப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதன் மேல் உப்பு வைத்து நன்கு தேய்க்கவும்.

பின் உப்பு தேய்த்த பழத்தை மெல்லிய வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய வில்லைகளை ஒரு பாட்டிலில் தேன் எடுத்துக் கொண்டு அதில் நன்கு குலுக்கி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அல்லது சாதாரணமாக வெளியிலும் வைத்து ஊற வைத்து எடுத்து பத்திரப்படுத்தி வைக்கலாம். அல்லது, வெட்டிய வில்லைகளில் சர்க்கரையை தூவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.

சர்க்கரை கரைந்து, பழவில்லைகளுடன் சேர்ந்தவுடன், ஒரு முறை நன்கு கலக்கிவிட்டு பாட்டிலில் போட்டு வைக்கவும்.

பின் வேண்டும் போது, ஒரு தேக்கரண்டி எடுத்து, ஒரு கிளாஸ் கொதிநீரில் போட்டு கலக்கி பருகவும்.

அடியில் தங்கும் வில்லைகளையும் அப்படியே சாப்பிடலாம்.

விட்டமின் சி நிறைந்த சுவையான, கொரியாவில் எல்லோரும் விரும்பி அருந்தும் டீ இது.

குறிப்புகள்:

தேன், சர்க்கரை இவைகளின் அளவுகளை அவரவர் விருப்பத்திற்கும், சுவைக்கும் ஏற்றவாறு குறைத்தும், அதிகப்படுதியும் சேர்க்கலாம். தாயரித்த கலவை சற்று தளர்வாக இருந்தால் போதும்.