நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதாரண நூடுல்ஸ் - ஒரு சிறிய பாக்கெட் நறுக்கிய வெங்காயத் துண்டுகள் - ஒரு கப் முளைக்கட்டிய பச்சைப்பயறு - ஒரு கப் சோயா சாஸ் - 2 தேக்கரண்டி அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி உப்பு

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

நூடுல்ஸ் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி நூடுல்ஸைத் தயார் செய்து ஆறவைத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு

நூடுல்ஸைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் முளைக்கட்டியப் பயிறைச் சேர்த்து வதக்கி

ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

அத்துடன் உப்பு

மிளகுத் தூள்

சோயா சாஸ் மற்றும் அஜினோமோட்டோ சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.

கடைசியாக நூடுல்ஸைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

டேஸ்டி நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ் ரெடி. பரிமாறும் போது சிவப்பு

பச்சை மிளகாய் சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்புகள்: