நாசி குன்னிங் (Yellow rice)
0
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி- 1கப்
கெட்டி தேங்காய் பால்- 3/4கப்
லெமன் கிராஸ்- 2
பன்டான் இலை-2
எலுமிச்சை இலை - 1(விரும்பினால்)
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
லெமன் கிரஸ் நுனிப்பகுதியை வெட்டி விட்டு தடிமனாக உள்ள பகுதிய லேசாக தட்டிக் கொள்ளவும்
அரிசியுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து மேலும் 1கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் அல்லது ரைஸ்குக்கரில் வேக வைக்கவும்.
வெந்ததும் லெமன் கிராஸ் பன்டான் இலைகள், எலுமிச்சை இலையை நீக்கி விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
ஜாஸ்மின் அரிசி அல்லது தாய் பச்சரிசியில் செய்தால் இன்னும் சுவை கூடும். காரமான சிக்கன் கிரேவியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நெத்திலி கருவாடு சம்பல்(http://www.arusuvai.com/tamil/node/5181), முட்டை ஆம்லெட் இதற்கு சிம்பிள் காம்பினேஷன்.