நவரத்தின கிரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட் - 2

பீன்ஸ் - 15

பட்டாணி - 1 கப்

குடைமிளகாய் - 1

உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - 1

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு :

இஞ்சி -1 துண்டு

பூண்டு - 6 பல்

பச்சைமிளகாய் - 4

சீரகம் - 2 தேக்கரண்டி

தனியா - 1 மேசைக்கரண்டி

பட்டை - சிறிய துண்டு

மிளகு - 2 தேக்கரண்டி

அலங்கரிக்க :

அன்னாசி, ஆப்பிள், செர்ரி மூன்றும் சேர்ந்து - 1/2கப்

பனீர் - 50 கிராம்

முந்திரி - 50 கிராம்

திராட்சை - 50 கிராம்

பாதாம் - 50 கிராம்

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

அரைப்பதற்கு கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு, வெடித்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்தபின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.

சிறிதளவு காய்கள் வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.

காய்கள் அவிவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொத்தமல்லி தூவி கொதிக்க விடவும்.

காய்கள் வெந்து கிரேவியாக சுருளும் வரை விடவும்.

நெய்யில் பனீர், முந்திரி, திராட்சை, பாதாம் வறுத்து அலங்கரிக்கவும்.

அன்னாசி, ஆப்பிள், செர்ரி துண்டுகளை மேலே தூவவும்.

குறிப்புகள்:

இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.