தோன்கியோ காஜு
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் - 3 மைதா மாவு - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் [பழத்தின் இனிப்பு சுவைக்கு ஏற்றபடி] தேங்காய் துருவல் - அரை கப் பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி வெனிலா / ரோஸ் எசன்ஸ் - சில துளிகள் முட்டை - 2 [விரும்பினால்] எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
பழத்துடன் சர்க்கரையை சேர்த்து பிசையவும்.
சர்க்கரை கரையும் வரை நன்றாக பிசையவும். இதில் அடித்த முட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொண்டே இருக்கவும். கட்டி தட்டாமல் முழுவதும் கலந்து விடவும்.
அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பின் எசன்ஸ் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கெட்டியான மாவு பதத்தில் தயார் செய்யவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரண்டியால் ஒரு கரண்டி மாவை எடுத்து விட்டு ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பி விட்டு நன்றாக சிவக்க எடுக்கவும். சுவையான தோன்கியோ காஜு தயார்.