தோடம்பழ ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோடம்பழம் (கமலாஆரஞ்சு) - ஒன்று

சீனி (சர்க்கரை) - 4 மேசைக்கரண்டி

உப்பு - சிறிதளவு

தண்ணீர் - 3 கப்

ஐஸ்கட்டி - அரை கப்

செய்முறை:

தோடம்பழத்தை (ஆரஞ்சுப்பழத்தை) எடுத்து அதன் தோலைச்சீவி இரண்டாக வெட்டவும்.

அதன் பின்பு அதில் ஒரு பாதியை எடுத்து ஒரு கோப்பையில்(கப்) சாறு பிழியவும்.

மற்ற பாதியையும் சாறு பிழியவும். அதன் பின்பு பிழிந்த சாற்றை வடியினால் வடிக்கவும். வடித்தசாற்றுடன் சீனி (சர்க்கரை) உப்பு, தண்ணீர், ஐஸ்கட்டி சேர்த்து கலக்குங்கள்.

இதோ பழரசம் தயாராகி விட்டது. இந்த பழரசத்தை அழகான பூக்கள் பழங்கள் வர்ணங்கள் போட்ட கிளாஸில் (கப், குவளை) பரிமாறுங்கள்.

குறிப்புகள்:

இது உயிர்சத்து சி நிறைந்ததும் சுவையானதும் குழந்தைகளுக்கு விருப்பமானதும், கோடை காலத்திற்கு மிகமிக சிறந்ததும் இலகுவாக செய்யகூடியதுமான ஜூஸ் ஆகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - (1)பழரசத்தில் விதை சக்கை இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். (2)பழரசத்தை அழகான பூக்கள் பழங்கள் வர்ணங்கள் போட்ட கிளாஸில் (கப்,குவளை) பரிமாறுங்கள். (3) சிறிதளவு உப்பு போடலாம் ஆனால் உப்பு போட்டால் சுவை அதிகமாக இருக்கும்.