தொதல் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்பால் - 2 டின் சிவப்பு அரிசிமா - அரை டின் (தேங்காய்ப்பால் டின்னால்) தண்ணீர் - 1 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்) சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி - 400 கிராம் (அல்லது தேவையான இனிப்புக்கு ஏற்ப) வறுத்த உடைத்த பயறு - ஒரு கைப்பிடி கஜு (முந்திரி) - 25 பட்டர் - ஒரு தேக்கரண்டி வெனிலா/ஏலக்காய் - சிறிது

செய்முறை:

கித்துள்/சர்க்கரையை சிறிய துண்டுகளாக நொருக்கவும். பிரவுண் சீனியாக இருந்தால் அப்படியே போடலாம்.

முந்திரியை இரண்டிரண்டாக உடைத்து பட்டரில் வறுத்து எடுக்கவும்.

பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய்ப்பால்

சிவப்பு அரிசிமா

தண்ணீர்

சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி

பயறு எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.

இந்த கலவையை சிறிது அதிகமான தீயில் வைத்து எண்ணெய் பிறக்கும் வரை கிளறவும்.

எண்ணெய் பிரிந்து கலவை சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும்

ஏலக்காய்/வெனிலா

கஜு சேர்த்து கிளறி ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி விட்டு ஆற விடவும்.

சுவையான தொதல் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: