தேங்காய்ப்பூச் சம்பல் III

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பூ - 1 கப்

கறித்தூள் - 1 தேக்கரண்டி (அல்லது உறைப்பிற்கேற்ப)

எலுமிச்சை சாறு - 1 - 11/2மேசைக்கரண்டி

உப்பு

வெங்காயம் - 2

செய்முறை:

வெங்காயத்தை மிகவும் குறுணலாக வெட்டி ஏனைய அனைத்து பொருட்களுடனும் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும்.

சுவையான உடனடி சம்பல் தயார். இதனை இடியப்பம், புட்டு, ரொட்டி, பாண், தோசை என்பவற்றுடன் சாப்பிடலாம்.

குறிப்புகள்: