தேங்காய்ப்பால் சொதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பால் - 2 கப்

நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் - 5/6

வெட்டிய வெங்காயம் - 1/4 கப்

கறிவேப்பிலை - 1 நெட்டு

புளி - 1 பாக்களவு (or தேவையான அளவு)

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்

செய்முறை:

தண்ணீரில் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, புளி என்பவற்றை போட்டு மூடி கொதிக்க விடவும்.

கலவை நன்கு கொதித்ததும் தேங்கய்ப்பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

1 அல்லது 2 கொதி வந்ததும் இறக்கி சூடாக சோறு/புட்டு/இடியப்பதுடன் பரிமாறலாம்.

குறிப்புகள்:

பழப்புளிக்கு பதிலாக எலுமிச்சம்புளியும் பயன்படுத்தலாம். இதற்கு மேற்கூறிய முறையில் பழப்புளியை தவிர்த்து சமைத்து சொதியை இறக்கி சிறிது ஆறியதும் பாதி எலுமிச்சம்பழத்தை (சிறிதாயின் ஒன்று) பிழிந்து விடலாம்.