தூனா மீன் சாண்விட்ச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பக்கெட் (baguette) - 2 அல்லது பாண் துண்டுகள் தூனா மீன் டின் - ஒன்று சோளம் - ஒரு டின் கேரட் - 2 வெங்காயம் - ஒன்று மயோனைஸ் - தேவையான அளவு பச்சை மிளகாய் - 2 முட்டை - 2 தக்காளி - 2 சாலட் - ஒன்று எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். சாலட்டை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

முட்டையை வேக வைத்து சிறு துண்டுகளாக வெட்டவும். தக்காளியை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம்

பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தூனா மீனை சேர்த்து கிளறவும்.

மீன் நன்றாக வதங்கியதும் கேரட் துருவலை சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து கிளறவும்.

அடுப்பில் இருந்து இறக்கி சோளத்தை சேர்த்து கிளறி ஆறிய பின் மயோனைஸ் சேர்க்கவும்.

பக்கெட்டை படத்தில் இருப்பது போல் இரண்டாக வெட்டி சாலட் வைக்கவும்.

அதனுள் தூனா மீன் கலவையை வைக்கவும்.

பின்னர் அதில் முட்டை துண்டுகள் மற்றும் தக்காளியை துண்டுகளை வைக்கவும். மேலே சிறிய சாலட் துண்டை வைத்து மூடவும்.

சுவையான தூனா மீன் சாண்விட்ச் தயார். இது போல பாண் துண்டுகளில் வைத்து ரோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

குறிப்புகள்: