தூனா பிஷ் ரோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தூனா மீன் - 1 டின் மைதா மாவு - 2 கப் முட்டை - 1 கெட்டியான தேங்காய் பால் - முக்கால் கப் உப்பு - 2 தேக்கரண்டி கேரட் - பாதி உருளைகிழங்கு - 2 பட்டாணி - அரை கப் முட்டை கோஸ் - அரை கப் பச்சைமிளகாய் - 2 ரம்பை இலை - 2 துண்டு கறிவேப்பிலை - சிறிது கறி மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் - சிறிது தனியாத்தூள் - அரைத் தேக்கரண்டி சீரகத்தூள் - அரைத் தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மைதாவை சலித்து எடுத்து வைக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து

முக்கால் கப் கெட்டிப்பால் எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டின் தோலை நீக்கி வட்டமாக நறுக்கிகொள்ளவும். உருளைகிழங்கையும் தோலை நீக்கி கொஞ்சம் பெரிதாக நறுக்கிகொள்ளவும். பச்சைமிளகாய்

முட்டைகோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

நறுக்கின கேரட் உருளைக்கிழங்கு துண்டங்களை தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பட்டாணியை தனியாக வேகவைத்துக்கொள்ளவும். தூனாமீனை தண்ணீரை வடித்துவிட்டு எடுத்து வைக்கவும்.

மைதாமாவில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பும்

தேங்காய் பாலும் சேர்த்து கலக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். கட்டிகள் இருந்தால் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு எடுத்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு தவாவை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை

ரம்பை இலை போட்டு தாளிக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய முட்டை கோஸை சேர்த்து வதக்கவும்.

அதன் பின்பு நறுக்கின பச்சைமிளகாய்

தூனா மீனை சேர்த்து வதக்கி மிளகுத்தூளைத் தவிர மற்ற அனைத்து தூள்களையும் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.

வேகவைத்த காய்கறிகளை போட்டு நன்கு கிளறி மசாலா அனைத்தும் காய்கறியில் சேரும் வரை பிரட்டி விடவும்.

கடைசியாக மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

ஒரு நான்-ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து

கரைத்த மாவில் இருந்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி தவா முழுவதும் பரவும்படி மாவை நன்கு சுற்றி விடவும். தீயை மிதமானதாக வைக்கவும். மைதா ஆப்பம் போல் வெந்ததும் தானாகவே கழன்று வந்துவிடும்.

எல்லா மாவையும் இதே போல ஆப்பங்களாக சுட்டு எடுக்கவும். பின்னர் சுட்டுவைத்த ஆப்பத்தை ஒவ்வொன்றாக எடுத்து அதன் ஓரத்தில் பிசைந்துவைத்த காய்கறி கலவையை வைத்து ரோல் போல் சுற்றி கொள்ளவும்.

இதனை அப்படியே தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். புளிப்பு தேவையென்றால் கடைசியில் மிளகுத்தூள் சேர்த்த பின்பு எழுமிச்சைபழத்தை பாதி பிழிந்து சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்புகள்: