திடீர் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மா(மைதா மா) - 2 சுண்டு

ஆட்டா மா(கோதுமை மா) - ஒரு சுண்டு

துருவிய கேரட் துருவிய - ஒரு கப்

துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்

துருவிய தக்காளிப்பழம் - ஒரு கப்

முட்டை - ஒன்று (விரும்பினால்)

பால் - 2 மேசைக்கரண்டி

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 2 பின்ச்

வெங்காயம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - ஒன்று

செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 2

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

ஆப்ப சோடா - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பெருஞ்சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - சிறிதளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கிரைண்டரில்(மிக்ஸியில்) கோதுமைமா(மைதாமா), ஆட்டாமா(கோதுமைமா), துருவிய காரட், துருவிய வெள்ளரிக்காய், துருவிய தக்காளிப்பழம், முட்டை, பால், பட்டர், மஞ்சள்தூள், உப்பு, ஆப்பசோடா, தண்ணீர் ஆகியவற்றை போட்டு கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.(தோசைமாபதத்திற்கு).

நன்றாக கலந்தபின்பு அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பாத்திரத்தில் போட்டவற்றை(10 -15) நிமிடங்கள் புளிக்க வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் சிறிதளவு நல்லெண்ணெயை ஊற்றி வைக்கவும்.

உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி உருளைக்கிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்மாட்டி)வைக்கவும்.

இதனை நல்லெண்ணெயுள்ள தட்டில் வைக்கவும்(கிழங்கு எண்ணெயில்படும்படி).

செத்தல் மிளகாயின்(காய்ந்தமிளகாயின்)காம்பினை அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

பின்பு அடுப்பில்தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணெயில் கடுகைபோட்டு வெடிக்கவிட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஓரளவு பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய், பெருஞ்சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில் குத்தியகிழங்கினால்(கிழங்கினை எண்ணெயில் நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணெயை எடுத்து அதை தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய மாவை )தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி போட்டு வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய தோசைகளையும் சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் தோசைகளை வைத்து அதனுடன் சம்பல்(துவையல்), சாம்பார், சட்னி, பிரட்டல்(கிழங்கு கத்தரிக்காய்,பீன்ஸ்) ஆகியவற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தோசை சுவையானதும் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கரோட்டீன் சத்து, நார்சத்து, நீர்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் வைட்டமின், மினரல் போன்ற பல சத்துக்கள் உடையதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும் ஆகும். ஆகவே இதை செய்து சாப்பிட்டு இதன் சுவையை அறியவும். எச்சரிக்கை - சர்க்கரைநோயாளர் கோதுமைமா(மைதா மா) சேர்க்காமல் செய்யவும். தக்காளிப்பழம்அலர்ஜி உள்ளவர்கள் அதனை சேர்க்காமல் செய்யவும், இருதய நோயாளர்வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் . மாற்றுமுறை -பட்டர் பதிலாக மாஜரீனை சேர்க்கலாம். தாளித்து போடாமலும்செய்யலாம், முட்டைபோடாமலும் செய்யலாம்.