தால் தர்க்கா (பாகிஸ்தான்)
தேவையான பொருட்கள்:
தால் தர்க்கா
மூங்தால் - அரை கப்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து (பொடியாக அரிந்தது)
பச்சைமிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
டால்டா - அரை தேக்கரண்டி
செய்முறை:
பச்சபருப்பை லேசாக வறுத்து ஊறவைக்கவும்.
குக்கரில் டால்டா, எண்ணெயை காய வைத்து அதில் பட்டை, லவங்கம், ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை போனதும் கொத்தமல்லி பாதியை போட்டு வதக்கி தக்காளி, பச்சைமிளகாய் ஒடித்து போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி ஊறவைத்த பருப்பையும் போட்டு வதக்கி கொஞ்சமாக கால் கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கினால் போதும்.
ஆவி அடங்கியதும் மீதி கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
குறிப்புகள்:
பாகிஸ்தானி ஹோட்டல்களில் இந்த டிஷ் கண்டிப்பாக இருக்கும். இது ரொட்டி, சாப்பாத்தி, குபூஸ், ருமாலி ரொட்டி, சிலோன் பரோட்டா போன்றவைகளுக்கு நல்ல சைட் டிஷ்.
இதே கடலைப் பருப்பிலும் செய்யலாம். கடலைப் பருப்பு ரொம்ப கேஸ் எப்பவாவது செய்து சாப்பிடலாம். மூங்தால் அடிக்கடி செய்யலாம்.