தாய்லாந்து வெள்ளரி சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெள்ளரிக்காய் - ஒன்று சாலட் வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் - ஒன்று சிகப்பு குடை மிளகாய் - ஒன்று சீனி - ஒன்றரை தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி வினிகர் - ஒரு மேசைக்கரண்டி (அ) லெமன் ஜுஸ் - 2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து வினிகர்

சீனி மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறவும். சீனி நன்கு கரைந்து சாஸ் போல வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு

சாஸைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெள்ளரிக்காயை விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை வட்டமாக நறுக்கி வைக்கவும். குடைமிளகாயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு தட்டில் நறுக்கிய வெள்ளரிக்காய்

வெங்காயம் மற்றும் குடைமிளகாயை வைத்து

அதன் மீது சாஸை ஊற்றி கலந்து

கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சாலட் ரெடி.

குறிப்புகள்: