தாய்லாந்து வெள்ளரிக்காய் சாலட்
தேவையான பொருட்கள்:
பெரிய வெள்ளரிக்காய் - 3
சாலட் வெங்காயம்( சிகப்பு நிறத்தில் கிட்டத்தட்ட
பீட்ரூட் நிறத்தில் இருக்கும்) - ஒன்று அல்லது
காரம் குறைந்த பெரிய வெங்காய வகை - ஒன்று
சீனி - 2 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
வினிகர் - ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை (பொடியாக நறுக்கியது) - 2 ஸ்பூன்
சிகப்பு மிளகாய்(காரமானது, சின்னதாக இருக்கும்) - 2 பொடியாக நறுக்கியது அல்லது
சிகப்பு குடை மிளகாய் - ஒன்று (துண்டுகளாக்கவும்)
செய்முறை:
அடுப்பில் ஒரு சின்ன வாணலியை வைத்து வினிகர், சீனி, உப்பினை சேர்த்து மிதமான தீயில் கிண்டவும்.
சீனி நன்கு கரைந்து சாஸ் போன்று வரும்போது அடுப்பை அணைத்து சாஸை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காயை பிடித்த வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
அதனுடன் வட்ட வடிவில் வெட்டிய வெங்காயம், மிளகாய் சேர்க்கவும்.
சாஸினை மேலே ஊற்றி கலந்து, கொத்தமல்லி தூவவும்.
குறிப்புகள்:
தாய்லாந்து உணவு வகைகளில் சாஸிற்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இந்த சாலட்டை இறால் ஃபிரிட்டர்ஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால் நிலக்கடலையும்(Peanut) சேர்க்கலாம்.