தாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பால் - இரண்டு கோப்பை

மீன் - அரைக்கிலோ

வெங்காயம் - ஒன்று

சோளமாவு - இரண்டு தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி

மீன் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி

பேஸில் இலை - ஒரு மேசைக்கரண்டி

அரைக்க:

காய்ந்தமிளகாய் - ஆறு

பூண்டு - நான்கு பற்கள்

இஞ்சி - ஒரு துண்டு

லெமன் கிராஸ் - ஒன்று

தனியா - ஒரு மேசைக்கரண்டி

மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து வேண்டிய துண்டுகள் செய்துக் கொள்ளவும்.

காய்ந்தமிளகாயை தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் அரைப்பதற்கு தேவையான பொருட்களை சேர்த்து மையாக அரைத்து வைக்கவும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி உடனே அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து அரைக்கோப்பை தேங்காய்ப்பாலை ஊற்றி நன்கு கலக்கி விட்டு வேக விடவும்.

அரைத்த மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை வேகவிடவும்.

பிறகு மீதியுள்ள தேங்காய்ப்பாலில் சோளமாவை கரைத்து ஊற்றவும். அதைத் தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், சோயா சாஸ், மீன் சாஸ், கொத்தமல்லி மற்றும் பேஸில் இலைகளை போட்டு, அரைக்கோப்பை நீரைச் சேர்த்து உப்பை பதம் பார்த்து விட்டு கொதிக்க விடவும்.

சாஸ் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை குறைத்து வைக்கவும். சாஸ் வேண்டிய அளவிற்கு கெட்டியானவுடன் மீன் துண்டுகளைப் போட்டு வேகவிடவும்.

மீன் வெந்தவுடன் எலுமிச்சைச்சாற்றை ஊற்றி இறக்கி வெள்ளைச் சோற்றுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: