தாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - அரை கிலோ தேங்காய்ப் பால் - 2 கப் வெங்காயம் - ஒன்று சோள மாவு - 2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு - ஒரு மேசைக்கரண்டி மீன் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி பேஸில் இலை - ஒரு மேசைக்கரண்டி உப்புத் தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி அரைக்க: காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 4 பற்கள் இஞ்சி - ஒரு துண்டு லெமன் கிராஸ் - ஒன்று தனியா - ஒரு மேசைக்கரண்டி மிளகு

சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மீனைச் சுத்தம் செய்து வேண்டிய அளவில் துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.

காய்ந்த மிளகாயைத் தண்ணீரில் ஊற வைத்தெடுத்து

அத்துடன் அரைக்கக் கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதைப் போட்டு வதக்கவும். அத்துடன் அரை கப் தேங்காய்ப் பாலை ஊற்றி நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும்.

மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும்

மீதிமுள்ள தேங்காய்ப் பாலில் சோள மாவைக் கரைத்து ஊற்றி

நறுக்கிய வெங்காயம்

சோயா சாஸ்

மீன் சாஸ்

உப்பு

கொத்தமல்லி மற்றும் பேஸில் இலைகளைப் போட்டு

அரை கப் நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பின் தீயைக் குறைத்து வைக்கவும். நன்கு கொதித்து கெட்டியானவுடன் மீன் துண்டுகளைப் போட்டு வேகவிடவும்.

மீன் வெந்தவுடன் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி இறக்கவும்.

சாதத்துடன் சூடாகப் பரிமாற

சுவையான தாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி ரெடி.

குறிப்புகள்: