தாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - கால் கிலோ ப்ரோக்கலி (அ) காலிஃப்ளவர் - ஒரு கப் (இரண்டும் கிடைத்தால் கலந்து எடுத்துக் கொள்ளவும்) முட்டைக்கோஸ் - கால் பாகம் ஸ்ப்ரிங் ஆனியன் (வெங்காயத் தாள்) - 3 (துண்டுகளாக்கவும்) உப்பு - கால் தேக்கரண்டி அல்லது ஃபிஷ் சாஸ் - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி சன் ஃப்ளவர் (அ) வெஜிடபுள் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி வினிகர் - ஒரு தேக்கரண்டி துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி பொடி செய்த நிலக்கடலை (Pea Nut) - ஒரு தேக்கரண்டி கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி தண்ணீர் - 3 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு 2 நிமிடங்கள் வேகவிட்டு பொரித்தெடுக்கவும். (மொறுமொறுப்பாக இருக்கக்கூடாது).
கார்ன் ஃப்ளாரைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
சிக்கன் பொரித்த எண்ணெயில் ப்ரோக்கலியைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் முட்டைக்கோஸைப் போட்டு 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
கோஸுடன் சிக்கன்
வதக்கிய ப்ரோக்கலி
சோயா சாஸ்
துருவிய இஞ்சி
வினிகர்
உப்பு
கார்ன் ஃப்ளார் கரைசல் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.
கடைசியாக நல்லெண்ணெய்
பொடி செய்த நிலக்கடலை
ஸ்பிரிங் ஆனியன் போட்டுக் கிளறி இறக்கவும்.
டேஸ்டி தாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை ரெடி.