தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ

ரொக்கோலி அல்லது காலிஃப்ளவர் - ஒரு கப் (இரண்டும் கிடைத்தால் கலந்து எடுத்துக் கொள்ளவும்)

மஷ்ரூம் (காளான்) - ஒரு கப்

ஸ்ப்ரிங் ஆனியன் (வெங்காயத்தாள்) - 3 (துண்டுகளாக்கவும்)

உப்பு- 1/4 ஸ்பூன் அல்லது பிஷ் சாஸ் - ஒரு ஸ்பூன்

சோயா சாஸ் - 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்

சன்ஃப்ளவர் அல்லது வெஜிடபிள் எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி

வினிகர் - ஒரு ஸ்பூன்

துருவிய இஞ்சி - ஒரு ஸ்பூன்

பொடி செய்த நிலக்கடலை(Pea Nut) - ஒரு ஸ்பூன்

கார்ன் ஃப்ளார் - ஒரு ஸ்பூன்

தண்ணீர் - 3 ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் சன்ஃப்ளவர் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை மட்டும் போட்டு 2 நிமிடம் வேகவைத்து பொரித்து எடுக்கவும்(மொறு மொறுப்பாக இருக்கக்கூடாது).

கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

அதே எண்ணெயில் காலிஃப்ளவர், புரோக்கோலியைப் போட்டு 2 நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு அதே எண்ணெயில் மஷ்ரூமை போட்டு 2 நிமிடம் நன்றாக கிண்டவும்.

சிக்கன், வதக்கிய காய்கறிகள், சோயாசாஸ், இஞ்சித் துருவியது, வினிகர், உப்பு, கார்ன் ஃப்ளார் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் நன்கு கிண்டவும்.

நல்லெண்ணெய், கடலைத்தூள், ஸ்பிரிங் ஆனியன் போட்டு கிண்டி இறக்கவும்.

குறிப்புகள்:

தாய்லாந்தில் உப்பிற்கு பதில் பிஷ் சாஸ் சேர்ப்பார்கள். கிடைத்தால் உப்பிற்கு பதிலாக அதனை ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.