தாய்லாந்து சிக்கன் பிரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தாய்லாந்து ஜாஸ்மின் ரைஸ் அல்லது பாஸ்மதி ரைஸ் - 2 கப்

தேங்காய்ப்பால் - 200 மி.லி.

உப்பு - 1 1/2 ஸ்பூன்

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள்(நீளவாக்கின் மெலிதாக அரிந்தது) - 1/2 கப்

சிகப்பு குடை மிளகாய் துண்டுகள் - 1/4 கப்

ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கொத்து

பெரிய வெங்காயம்(நீள வாக்கில் அரிந்தது) - ஒன்று

பிஷ் சாஸ் - 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4 தண்ணீரில் ஊறவைத்து அரைத்தது

பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

சீனி - 1/2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

சன்ஃப்ளவர் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கெட்டியான தேங்காய்ப்பாலில் தண்ணீர் ஊற்றி 4 கப் ஆக்கிக் கொண்டு அரிசியில் தண்ணீருக்கு பதில் ஊற்றி ரைஸ் குக்கரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்ள்.

தாய்லாந்து பிரைட் ரைஸுக்கு தேங்காய்ப்பாலில் வேக வைத்த சாதம்தான் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய், சன்ஃப்ளவர் எண்ணெயை கலந்து ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் பூண்டு விழுதை 30 வினாடிகள் போட்டு வதக்கவும்.

சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக 2-3 நிமிடங்கள் வேகும் வரை வதக்கவும். பிஷ் சாஸ் ஊற்றவும்.

மிளகாய் விழுது, சீனி, உப்பு சேர்த்து குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும்.

வேக வைத்த சாதம் சேர்த்து பிரட்டி ஸ்ப்ரிங் ஆனியனை அரிந்து தூவவும்.

ஃப்ரைட் ரைஸ் ரெடி.

குறிப்புகள்:

சாதாரணமாக வேக வைத்த சாதத்திலும் செய்யலாம். ஆனால் இந்த அளவு சுவை இருக்காது. வெங்காயம், குடை மிளகாய் அதிகம் வதங்காமல் க்ரிஸ்பியாக இருந்தால் நன்றாக இருக்கும். பிஷ் சாஸ் உபயோகிப்பதால் உப்பு குறைத்து போட்டுள்ளேன். ஏனென்றால் தாய்லாந்தில் உப்பிற்கு பதிலாக பல சமையலில் பிஷ் சாஸே உபயோகிப்பார்கள். அவ்வளவு உப்பு அதிகமாக இருக்கும். பிஷ் சாஸிற்கு பதிலாக சோயா சாஸ் உபயோகித்தால் இன்னும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.