தாய்லாந்து சிக்கன் கறி ( Gang Gai )

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ

தேங்காய்ப்பால் - ஒரு கப்

Basil Leaves(துன்னுத்திப்பச்சை இலை) - 6

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

வறுத்துப் பொடித்த காய்ந்த மிளகாய் - ஒரு ஸ்பூன்

உப்பு - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - 3 ஸ்பூன்

பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

Fish Sauce - ஒரு ஸ்பூன்

செய்முறை:

கோழியை சிறு துண்டங்களாக நறுக்கவும்.

Basil இலைகளை அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு விழுதைப்போட்டு 30 நொடி வதக்கவும்.

சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

மிளகாய்த்தூள், மல்லித்தூள், Fish sauce சேர்த்து வதக்கவும்.

தேங்காய்ப்பால் சேர்க்கவும். அடுப்பில் தீயை குறைக்கவும்.

அரைத்த basil ஐ சேர்த்து கிண்டி, 10 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.

ஃப்ரைட் ரைஸ்ஸுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்புகள்:

தாய்லாந்து உணவு வகைகள் அனைத்தும் புளிப்பு, காரம், மணம் நிறைந்தது. இந்த உணவுகளின் சுவை அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

லெமன் கிராஸ் கிடைத்தால் சிறு துண்டுகளாக வெட்டி பூண்டு வதக்கும்போது சேர்த்து வதக்க வேண்டும். தாய்லாந்து உணவு வகைகளுக்கு வாசனைக்கு சேர்க்கப்படுவது லெமன் கிராஸ் மற்றும் காலங்கால்(இஞ்சியில் ஒரு வகை). Fish Sauce Super Market களில் கிடைக்கும். லெமன் கிராஸ் கிடைக்காவிடில் 5 எலுமிச்சை இலைகளை சேர்க்கவும்.