தாய்லாந்து சிக்கன் கறி
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ தேங்காய்ப் பால் - ஒரு கப் துன்னுத்திப் பச்சை இலை (Basil Leaves) - 6 மல்லித் தூள் - 2 தேக்கரண்டி வறுத்துப் பொடித்த காய்ந்த மிளகாய் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி ஃபிஷ் சாஸ் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கோழியைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
துன்னுத்திப் பச்சை இலைகளை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு விழுதைப் போட்டு 30 நொடிகள் வதக்கவும்.
அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் சிக்கனைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
சிக்கனுடன் மிளகாய்த் தூள்
மல்லித் தூள்
ஃபிஷ் சாஸ் சேர்த்து வதக்கவும்
பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து கிளறிவிட்டு
அடுப்பில் தீயின் அளவை குறைத்து வைத்து
துன்னுத்திப் பச்சை இலை விழுதைச் சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகும்படி கிளறி 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
சுவையான தாய்லாந்து சிக்கன் கறி (Gang Gai) ரெடி. ஃப்ரைட் ரைஸுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.