தாமரைத் தண்டு சப்ஜி
தேவையான பொருட்கள்:
தாமரை தண்டு - 1 கணு (தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) வெங்காயம் - 1 பெரியது (பொடி கட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்) தக்காளி - 1 பெரியது (பொடி கட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்) பச்சை/சிகப்பு மிளகாய் - 2 (இரண்டாக கீறி வைக்கவும்) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) பூண்டு - 2 பெரிய பல் (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) கொத்தமல்லித்தழை - 2 கீற்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) வெங்காயத்தாள் - ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி (காரம் தேவைப்படுபவர்கள் அரைத் தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்) மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி அரைக்க: தேங்காய்த்துருவல் - 3/4 கப் கசகசா - 1/2 தேக்கரண்டி தாளிக்க: எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி நல்லமிளகு - 1/2 தேக்கரண்டி பட்டை - 1 சிறிய துண்டு ஏலக்காய் - 1 உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
மேலே கூறிய தேவையான பொருட்களை
நறுக்க வேண்டியவற்றை நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். படத்தில் உள்ளதுபோல் தாமரைத்தண்டை தோல் நீக்கி
வட்டவடிவில் வெட்டிக்கொள்ளவும் முதலில் வட்ட வட்டமாக நறுக்கி விட்டு
பின்னர் அவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஓரளவு பொடியாகவே நறுக்கிகொள்ளவும். அப்போது விரைவாக வெந்துவிடும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
கடுகு
உளுத்தம்பருப்பு
சீரகம்
பெருஞ்சீரகம்
நல்லமிளகு
பட்டை
ஏலக்காய்
பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.
அடுத்து இஞ்சி
பூண்டு
வெங்காயம் என்று ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கிய பின்பு நறுக்கி வைத்துள்ள தாமரைத்தண்டு துண்டங்களைப் போட்டு நன்றாக கிளறவும்.
எல்லாம் வதங்கிய பின்னர் மிளகாய்த்தூள்
மஞ்சள்த்தூள்
கரம் மசாலாத்தூள் போட்டு கிண்டி விடவும்.
ஒரு கோப்பை தண்ணீர் விட்டு அதாவது கலவை எல்லாமும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேகவைக்கவும்.
தேங்காய்த்துருவல் மற்றும் கசகசா இரண்டையும் மிக்ஸியில் இட்டு
நன்றாக ஒருமுறை மிக்ஸியை சுற்றி விட்டு பின்னர் 1/2 கப் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைப்பு நைசாக இருக்கவேண்டும்
அரைப்பு முடிந்தபின் மிக்ஸியை 1 கப் தண்ணீர் விட்டு கழுவி அந்த தண்ணீருடன் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தாமரைத்தண்டு முக்கால் பாகம் வெந்துவரும்போது
தண்ணீர் வற்றி வரும். அப்போது அரைத்த விழுது மற்றும் அரைப்பு தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன்
கொத்தமல்லித்தழை
வெங்காயத்தாள்
மற்றும் தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதிக்கவைக்கவும். மிதமான தீயிலிலே சமைக்கவும்.
அரைப்பு கலவை எல்லாமும் சேர்ந்து
கலவை நீர் வற்றி வரும் நேரம் இறக்கவும்.
இப்போது சுவையான தாமரைதண்டு சப்ஜி தயார். இதனை பூரி
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம். கெட்டியான தயிர் உடன் சேர்த்து பரிமாறவும்.
நான் சீனாவிற்கு வந்த பின்புதான் தாமரைத்தண்டு சமைக்கிறேன். பல விதமான ரெசிப்பிஸ் டிரைப்பண்ணி பார்த்தேன். ஆனால் இந்தமுறை மிகவும் நன்றாக இருக்கும். இந்த தாமரைத்தண்டில் ஒரு சுவையும் இருக்காது. ஆனால் நல்ல இயற்கை மருந்தாகும். அதில் உப்பு சுவை ஏறுவதே மிகவும் கஷ்டம். ஆனால் இந்தமுறையில் செய்தால் தாமரைத்தண்டா இவ்வளவு டேஸ்ட்டாக இருக்கின்றது என்று வியப்போம். - திருமதி. மஹாலெஷ்மி ப்ரகதீஸ்வரன்