தாபா சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி துண்டுகள் - கால் கிலோ வெண்ணெய் மற்றும் எண்ணெய் - தலா 2 மேசைக்கரண்டி பூண்டு மற்றும் இஞ்சி - தலா அரை மேசைக்கரண்டி தக்காளி - கால் கிலோ மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி சீரக தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி கெட்டி தயிர் - அரை கப் கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு - அரை மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 (விருப்பமிருந்தால்) மல்லி இலை

இஞ்சி - அலங்கரிக்க உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தனியா தூள்

சீரக தூள்

மிளகாய் தூள்

மிளகு தூள்

கரம் மசாலா சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து தண்ணீரை சுத்தமாக இருத்துட்டு வைக்கவும். பேனில் எண்ணெயும் பட்டரும் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்கும் வரை வதக்கவும். சிவந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

அதே பேனில் மீதமுள்ள எண்ணெயில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடத்திற்கு பின் கலந்து வைத்துள்ள மசாலாவில் பாதியை இதில் சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும். இடையிடையே பிடித்துக் கொள்ளாமல் கிளறி விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் வதக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகள்

மீதமுள்ள கலந்த மசாலா மற்றும் தயிர் சேர்க்கவும். நன்றாக கிளறி தீயை குறைத்து திரும்பவும் எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வேக விடவும்.

ஐந்து நிமிடத்திற்கு பிறகு கசூரி மேத்தியை உள்ளங்கையில் வைத்து நசுக்கி சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டும் சேர்த்து கிளறவும். மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும்.

ஐந்து நிமிடத்தில் இறக்கி கொத்தமல்லி

நீளமாக நறுக்கிய இஞ்சி

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: