தவா புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று குடை மிளகாய் - ஒன்று காரட் - பாதி பீன்ஸ் - 3 பச்சை பட்டாணி - கால் கப் பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லித் தழை - கைப்பிடி சீரகம் - அரை தேக்கரண்டி சில்லி கார்லிக் பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - தாளிக்க பாவ் பாஜி மசாலா - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு சில்லி கார்லிக் பேஸ்ட் தயாரிக்க : வர மிளகாய் - 4 பூண்டு - 5 பல்

செய்முறை:

வெங்காயம்

தக்காளியை நீளமாக நறுக்கவும். காரட்

பீன்ஸ் மற்றும் குடைமிளகாயை சிறிதாக நறுக்கவும். சில்லி கார்லிக் விழுது தயாரிக்க வரமிளகாயை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து

அதனுடன் பூண்டு சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்

ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி

காரட்

பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய குடை மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கிளறவும்.

வதக்கியவற்றுடன் உப்பு

பாவ் பாஜி மசாலா மற்றும்

சில்லி கார்லிக் பேஸ்ட் சேர்த்து பிரட்டவும்.

கடைசியாக வேக வைத்த சாதத்தை சேர்த்து பிரட்டி பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான தவா புலாவ் ரெடி.

சுவையான தவா புலாவ் ரெடி. இது மும்பையின் கடையோரங்களில் (Street Food)விற்கப்படும் ஒரு வகை உணவு.

குறிப்புகள்: