தர்பூசணி குல்பி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தர்பூசிணி - 1

சர்க்கரை - 1 கப்

வென்னிலா யோகர்ட் - 1 கப்

செய்முறை:

முதலில் தர்பூசிணியை தோலினை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பின்பு ஜுஸ்ஸரில் வெட்டி வைத்துள்ள தர்பூசிணி, சர்க்கரை மற்றும் வென்னிலா யோகர்ட் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

பின்பு இதனை ஐஸ் ட்ரெ அல்லது குல்பி செய்யும் ட்ரெயில் ஊற்றி ப்ரிஜில் வைக்கவும்.

4 - 5 மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிடவும்.

குறிப்புகள்:

வென்னிலா யோகர்டுக்கு பதிலாக வென்னிலா ஐஸ்கீரிமை சேர்க்கலாம்.