தயிர் சொதி
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்தமிளகாய் - 2
தக்காளி - நன்கு பழுத்தது ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும்.
கறிவேப்பில்லையைப் போட்டு வதக்கவும்.
பின்பு வெட்டி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பைக் குறைக்கவும்.
தயிரைக் கொட்டி கிளறவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிதளவு சூடானதும் இறக்கவும்
குறிப்புகள்:
சொதி நன்றாக கொதிக்கத் தேவையில்லை. தயிர் சேர்த்ததும் அடுப்பைக் குறைத்து கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் தயிர் திரண்டு விடும். இது சோறு, இடியப்பத்திற்கு நன்றாக இருக்கும்.