தயிர் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

மிளகுதூள் - 1 ஸ்பூன்

பூண்டுதூள் - 1 1/2 ஸ்பூன்

தயிர் - 4 ஸ்பூன்

ப்ரட் க்ரம்ஸ் - தே.அளவு

எண்ணெய் - பொரிக்க

உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து தேவையான அளவில் வெட்டி வைக்கவும்,மற்ற அனைத்தையும் தயாராய் வைக்கவும்.

கோழியில் மிளகுதூள்,பூண்டுதூள்,உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டவும்.

பின் அவற்றுடன் தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும்.இந்த கலவை சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும்.

ப்ரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

ஊறின கோழியை ஒவ்வொன்றாக எடுத்து ப்ரட் க்ரம்ஸில் போட்டு எல்லா பக்கமும் படுமாறு பிரட்டி எடுக்கவும்.

பிரட்டி எடுத்த கோழிகளை இவ்வாறு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

அடுப்பை குறைந்த தீயில் வைத்து எல்லா பக்கமும் திருப்பிவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான தயிர் சிக்கன் தயார்.

குறிப்புகள்:

இந்த தயிர் சிக்கனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்,காரம் அதிகம் இல்லாமலும்,மசாலாக்கள் இல்லாமலும் செய்வது.மிளகும்,பூண்டும் உடலுக்கு நல்லது,அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகின் அளவை கூட்டிக்கொள்ளலாம்,பூண்டு தூள் இல்லாவிட்டால் பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளலாம்.