தயிர் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கெட்டிதயிர் - 1 கப்

மைதா மாவு - 3 கப்

முட்டை - 4

சீனி - 1 1/2 கப்

சன்ப்ளவர் ஆயில் - 1 கப்

பேக்கிங் பவுடர் - 1 பெரியகரண்டி

வெனிலா பவுடர் - 1 பெரியகரண்டி

வெண்ணெய் - 5 கிராம்

செய்முறை:

மாவை சலித்துக் கொள்ளவும்.

முட்டையையும் சீனியையும் நன்கு நுரை வரும் வரை கலக்கவும்.

கலக்கிய முட்டை கலவையில் மாவை போட்டு நன்கு கிளறி அதில் பேக்கிங் பவுடர், எண்ணெய் ஊற்றி கிளறி கடைசியாக தயிரையும் ஊற்றி கலக்கவும்.

கேக் வைக்கும் தட்டில் வெண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை ஊற்றி அவனில் வைக்கவும்.

பின் 280° டிகிரி Fல் சூடாக்கிய அவனில் கேக் மாவை வைக்கவும்.

சுமார் 25 நிமிடங்கள் மேலே சிவந்தவுடன் எடுத்து விடவும்.

குறிப்புகள்:

தயிர் தண்ணீர் இல்லாமல் நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். அப்போது தான் கேக் நன்றாக இருக்கும்.