தபோலேஹ் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மிகச் சிறியதாக நறுக்கிய பார்சிலி இலை - ஒரு கப்

பொடியாக நறுக்கிய தில் இலை (இல்லையென்றால் விட்டுவிடலாம்) - கால் கப்

உடைத்த கோதுமை (bulgur wheat) - ஒரு கப்

நறுக்கிய புதினா இலை - கால் கப்

நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்

பெரிய தக்காளி - ஒன்று

எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - கால் கப்

எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உடைத்த கோதுமையை ஒரு கப் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவிட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

கோதுமையை சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விடவும்.

பிறகு கீழ்க்காணும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக கலந்து அழகான பாத்திரத்தில் பரிமாறவும்.

விருப்பத்திற்கேற்ப தக்காளி தோலைக் கொண்டு ரோஜாப்பூ செய்தோ அல்லது புதினா இலைகளை தூவியோ பரிமாறலாம்.

குறிப்புகள்:

சுவையான மிகவும் ஆரோக்கியமான, அழகான ஒரு சாலட் வகை இது. எவ்வளவு பொடியாக இலைகளை நறுக்குகின்றோமோ அவ்வளவு ருசியாக இருக்கும். பார்சிலி இலைகளை விரும்பாதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் கண்டிப்பாக விரும்பிச் சாப்பிடுவர். இதனை ஒரு முழுநேர உணவாகவும் பரிமாறலாம்.