தக்காளி சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளிப்பழம்- 3

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையானளவு

மிளகு (தூள்) - தேவையானளவு

பால் அல்லது ஜோக்கற் - தேவையானளவு

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - அரை தேக்கரண்டி

பெருஞ்சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

தேசிக்காய்ச்சாறு (லெமன் ஜூஸ்) - கால் தேக்கரண்டி

செய்முறை:

தக்காளிப்பழம், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

ஒரு பாத்திரத்தில் வெட்டிய தக்காளிப்பழம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மிளகுத்தூள், பால் அல்லது ஜோக்கற் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும்

வாணலியில் எண்ணெயை ஊற்றி கொதித்ததும் கடுகை போட்டு அது வெடித்ததும் பெருஞ்சீரகம் (சோம்பு) நறுக்கிய வெங்காயம் போட்டு தாளிக்கவும்

தாளித்தவற்றை இதில் கொட்டிக்கலக்கவும்.

அதன் பின்பு தேசிக்காய்ச்சாறு (லெமன் ஜூஸ்) ஆகியவற்றை சேர்த்துக்கலக்கவும் (நன்றாக கலக்கவும்)

அதன் பின்பு 4 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு சுவையான தக்காளி சாலட் தயார்.

குறிப்புகள்:

இதை தினமும் சாப்பிடுவதால் முகம் மிக அழகாக காணப்படும். குழந்தைகளுக்கு இதை தினமும் சாப்பிட கொடுத்து வந்தால் அழகானவர்களாக வளருவார்கள். இதை சாப்பிடுவதால் அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடாமல் விடுவது சிறந்தது.