தக்காளிப்பழ ஸ்வீட் ஸலட்
0
தேவையான பொருட்கள்:
தக்காளிப்பழம் - 5
பிரவுண் சீனி - 4 மேசைக்கரண்டி
அலங்கரிக்க:
புதினா/கொத்தமல்லி இலை - சிறிது
Icing Cream/Ice Cream - சிறிது
செய்முறை:
தக்காளிப்பழத்தை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டவும்.
அதனுள் பிரவுண் சீனியை போட்டு நன்கு கலந்து மூடி 2 மணித்தியாலங்கள் Refrigeratorஇல் அல்லது குளிர்ந்த இடத்தில் வைக்கவும்.
பின்னர் பரிமாறும் கோப்பைகளில் தக்காளி துண்டுகளையும், சாற்றையும் விட்டு புதினா/கொத்தமல்லி இலை, Icing Cream/Ice Cream கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
பிரவுண் சீனிக்கு பதிலாக வெள்ளை சீனியும் பயன்படுத்தலாம். ஆனால் பிரவுண் சீனி வெள்ளை சீனியை விட ஆரோக்கியத்திற்கு நல்லது.