தக்காளிப்பழ ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளிப்பழம் - 500 கிராம்

வெங்காயம் - 5

பச்சைமிளகாய் - 10

இஞ்சி - ஒரு துண்டு (3 அங்குலம்)

உள்ளி - 3 பல்

வினிகர் - ஒரு மேசைக்கரண்டி

சீனி - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையானளவு

செய்முறை:

தக்காளிப்பழத்தை கொதித்த நீரில் போட்டு கால் மணித்தியாலம் மூடி வைக்கவும்.

அதன் பின்பு தக்காளிப்பழத்தை எடுத்து அதன் தோலை உரிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் உரித்த பழங்களைப் போட்டு அதை நன்றாக மசிக்கவும்.

கிரைண்டரில்(மிக்ஸியில்) அல்லது அம்மியில் இஞ்சி, உள்ளி வெங்காயம், பச்சைமிளகாய் என்பவற்றை தண்ணீர் சேர்க்காது வினிகர் விட்டு விழுது போல அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடானதும் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் அரைத்த விழுதினை போட்டு ஓரளவு பொரியவிடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதில் மசித்த தக்காளிப்பழம், உப்பு ஆகியவற்றை போட்டு சேர்த்து கிளறவும்.

அதில் உள்ள நீர் சுண்டிய(வற்றிய)பிறகு இறக்கவும். அதன் பின்பு அதை ஆறவிடவும்.

ஆறிய பின்பு அதனை தொற்று நீக்கிய ஜாம் போத்தலில் போட்டு இறுக மூடி வைக்கவும். தேவையான நேரங்களில் இதை பரிமாறலாம்.

குறிப்புகள்:

தக்காளிப்பழ ஊறுகாயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின் A,C அந்தோசியமின் (P 20 Blue)போன்ற சத்துகள் அடங்கியது அத்துடன் புற்றுநோயை குணப்படுத்த இது உதவும். எச்சரிக்கை - தக்காளிப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.